/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பா.ஜ.,வினர் வீடுகளில் கருப்புக்கொடி பா.ஜ.,வினர் வீடுகளில் கருப்புக்கொடி
பா.ஜ.,வினர் வீடுகளில் கருப்புக்கொடி
பா.ஜ.,வினர் வீடுகளில் கருப்புக்கொடி
பா.ஜ.,வினர் வீடுகளில் கருப்புக்கொடி
ADDED : மார் 23, 2025 07:41 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி பா.ஜ., நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாதநிலை உள்ளது. கொலைகள் நடக்காத நாளே இல்லை.
மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் முதல்வரை கண்டித்து தமிழக பா.ஜ., சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் எனவும் அவரது வீட்டின் முன் நின்று முதல்வரை கண்டித்து கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில்ஈடுபடவேண்டும் என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் சுகனேஸ்வரி அவர் வீட்டின் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதேபோல் நகரில்உள்ள நிர்வாகிகள் அவரவர் வீட்டின் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.