/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தமிழில் 96 மதிப்பெண் பெற்ற பீஹார் மாணவி தமிழில் 96 மதிப்பெண் பெற்ற பீஹார் மாணவி
தமிழில் 96 மதிப்பெண் பெற்ற பீஹார் மாணவி
தமிழில் 96 மதிப்பெண் பெற்ற பீஹார் மாணவி
தமிழில் 96 மதிப்பெண் பெற்ற பீஹார் மாணவி
ADDED : மே 21, 2025 04:56 AM

பூவந்தி : பூவந்தி அருகேயுள்ள மணிமாறன் பள்ளியில் படித்த பீஹாரைச் சேர்ந்த மாணவி தமிழில் 96 மதிப்பெண் எடுத்துள்ளார்.
பீஹாரைச் சேர்ந்த பல்ராம்சர்மா, சங்கீதா தம்பதி மகள் பிரீத்தி 15, சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள மணிமாறன் பள்ளியில் முதல்வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வியில் படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 462 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் 96 மதிப்பெண் பெற்றவரை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர். பல்ராம்சர்மா வரிச்சியூரில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.