/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இளையான்குடி,மானாமதுரையில் வாழை இலை கட்டு ரூ.3 ஆயிரம் இளையான்குடி,மானாமதுரையில் வாழை இலை கட்டு ரூ.3 ஆயிரம்
இளையான்குடி,மானாமதுரையில் வாழை இலை கட்டு ரூ.3 ஆயிரம்
இளையான்குடி,மானாமதுரையில் வாழை இலை கட்டு ரூ.3 ஆயிரம்
இளையான்குடி,மானாமதுரையில் வாழை இலை கட்டு ரூ.3 ஆயிரம்
ADDED : செப் 02, 2025 03:34 AM
இளையான்குடி : இளையான்குடி,மானாமதுரையில் தொடர் முகூர்த்த நாட்கள் எதிரொலி மற்றும் கடுமையான வெயில் காரணமாக வாழை இலை விலை உச்சம் தொட்டு ஒரு கட்டு ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இளையான்குடி, மானாமதுரை பகுதியில் கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆவணி முகூர்த்த நாட்களை முன்னிட்டு வாழை இலைகளின் தேவை அதிகரித்தது.
ஆனால் தேவைக்கேற்ப வாழை இலை விளைச்சல் இல்லாததாலும், வெயில் காரணமாகவும் வாழை இலைகளின் விலை உயர்ந்து வருகிறது.
மானாமதுரையில் கள்ளர் வலசை, தெ.புதுக்கோட்டை, கோச்சடை,மேலநெட்டூர்,இடைக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது இப்பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினாலும், வாழை சாகுபடி மிக குறைந்த அளவிலேயே நடைபெற்று வருவதாலும் வாழை இலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தற்போது முகூர்த்த நாட்களை முன்னிட்டு அதிகளவில் வாழை இலை தேவைப்படுவதால் 40 அடுக்குகள்(200 இலைகள்)கொண்ட ஒரு கட்டு ரூ.2500 லிருந்து ரூ. 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உதிரியாக ஒரு இலை ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பல்வேறு ஊர்களில் உள்ள ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலை பயன்பாடு அதிகரித்துள்ளது.
வாழை இலை வியாபாரிகள் கூறியதாவது: தொடர் முகூர்த்த நாட்களை முன்னிட்டு வாழை இலை தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப வாழை இலை விளைச்சல் இல்லாததால் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
தற்போது கடுமையான வெயில் அடித்து வருவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.