ADDED : செப் 22, 2025 03:29 AM
சிவகங்கை : சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 5 வது தேசிய மருந்தியல் விழிப்புணர்வு வார விழா கொண்டாடப்படுகிறது.
புற நோயாளிகள் பகுதியில் மக்களுக்கு மருந்துகளின் பக்கவிளைவு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மருத்துவ மாணவர்களால் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. டீன் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவக் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தனர். நிலைய மருத்துவர் முகமது ரபி, துணை நிலைய மருத்துவர் தென்றல், துறை பேராசிரியர் நவஜோதி உள்ளிட்ட டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.