ADDED : ஜூலை 05, 2025 12:45 AM
சிவகங்கை; சிவகங்கை அருகே கே.சொக்கநாதபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் சமூக நீதி, மனித உரிமை பிரிவு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஆசிரியர் ஜேம்ஸ்குமார் முன்னிலை வகித்தார். சமூக நீதி மற்றும் மனித உரிமை துறை சிறப்பு எஸ்.ஐ., பிரேமலதா அலைபேசியில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
சிறப்பு எஸ்.ஐ., வளர்மதி, தலைமை காவலர் ஜெயந்தி ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர். ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.