ADDED : ஜூன் 21, 2025 11:35 PM
திருப்புத்துார்:திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆறுமுகநகர் லயன்ஸ், பள்ளி லியோ சங்கம் சார்பில் திருப்புத்துார் நகர் பள்ளிகளில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைவர் விக்டர், தாளாளர் ரூபன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் மாவட்ட முதல் துணை ஆளுநர் ஆறுமுகம், இரண்டாம் துணை ஆளுநர் மணிகண்டன் அரசுப் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கினர்.
பயிற்சியாளர் ஜோசபாட் ரஸ்ஸல் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைப் பயிலரங்கம் நடத்தினார்.