ADDED : மே 10, 2025 07:20 AM
மானாமதுரை: மானாமதுரை குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 97 மாணவர்கள் தேர்வெழுதி அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
7 மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் பயன்பாடு உள்ளிட்ட பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவி சக்தி பிரியங்கா காந்தி 586, ஜெகராணி 580, நிரஞ்சன் 577 பெற்றனர். 30 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் பூமிநாதன் பாராட்டி பரிசு வழங்கினார்.
சிவகங்கை: சிவகங்கை ஆக்ஸ்வர்ட் பதின்ம மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இப் பள்ளி மாணவி ஸ்ரீஹரிணி 597 மதிப்பெண் பெற்றுள்ளார். பள்ளி அளவில் ைஷனி அமீர் 591, ஸ்ரீஆஷிகாஸ்ரீ 585 மதிப்பெண் பெற்றுஉள்ளனர். 550க்கு மேல் 18 பேரும், 500க்கு மேல் 42 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளி முதல்வர் கீதா, ஆசிரியர்களை பள்ளி நிறுவனர் சியாமளாவெங்கடேசன், பள்ளி தாளாளர் வெங்கடேசன், பள்ளி செயலர் மீனா அனந்தகுமார் பாராட்டு தெரிவித்தனர்.