/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 02, 2025 12:42 AM
சிவகங்கை: துணிவு மற்றும் வீர சாகசம் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க, விண்ணப்பம் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஏதேனும் ஒரு துறையில் துணிவு மற்றும் வீர சாகசம் செய்த பெண்களுக்கு இந்த விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்படும்.
அத்துடன் ரூ.5 லட்சம் ரொக்க பரிசும் உண்டு. இந்த விருது தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்டவருக்கு வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பத்தை https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, அந்த விண்ணப்பங்களை 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும், என்றார்.