Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அழகப்பா பல்கலை தர வரிசையில் மூன்றாமிடம்

அழகப்பா பல்கலை தர வரிசையில் மூன்றாமிடம்

அழகப்பா பல்கலை தர வரிசையில் மூன்றாமிடம்

அழகப்பா பல்கலை தர வரிசையில் மூன்றாமிடம்

ADDED : செப் 11, 2025 06:03 AM


Google News
காரைக்குடி: அகில இந்திய உயர் கல்வி நிறுவன தரவரிசையில் அழகப்பா பல்கலை மூன்றாமிடம் பிடித்துள்ளது.

2016ம் ஆண்டு முதல் மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவனத் தரவரிசை அமைப்பு, பல்கலைகளுக்கு இடையேயான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. 2025 ஆண்டிற்காக நடத்தப்பட்ட தரவரிசை பட்டியலில் அழகப்பா பல்கலை, அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்குள் 44 வது இடமும், மாநில பொது பல்கலைத் தரவரிசையில் 14வது இடமும், பொது பிரிவில் 4025 உயர் கல்வி நிறுவனங்களுக்குள் அழகப்பா பல்கலை 73 வது இடத்தையும் பெற்றுள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். கடந்த 7 ஆண்டுகளாக பல்கலை தர வரிசையில் முதல் 50 இடங்களுக்குள்ளும், பொது பிரிவில் முதல் 100 இடங்களுக்குள் அழகப்பா பல்கலை தரத்தை தக்க வைத்து வருகிறது. அழகப்பா பல்கலை தரவரிசை பிரிவின் இயக்குனர் ஜெயகாந்தன் மற்றும் குழுவினர் தரவுகளை சமர்ப்பித்தனர். அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி குழுவினரை பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us