செப்.12ல் உழவரை தேடி வேளாண் முகாம்
செப்.12ல் உழவரை தேடி வேளாண் முகாம்
செப்.12ல் உழவரை தேடி வேளாண் முகாம்
ADDED : செப் 09, 2025 09:36 PM
சிவகங்கை; மாவட்ட அளவில் செப்., 12 அன்று உழவரை தேடி வேளாண்மை முகாம் நடைபெறும் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதில், வேளாண்மை துறை, அதை சார்ந்த துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து தருவார்கள்.
மேலும் வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்தும் விளக்கப்படும். செப்., 12 அன்று சிவகங்கை ஒன்றியத்தில் காயாங்குளம், முடிகண்டம், காளையார்கோவில் ஒன்றியத்தில் கொல்லங்குடி, முத்துார், மானாமதுரை ஒன்றியத்தில் எம்.கரிசல்குளம், மேலநெட்டூர், திருப்புவனம் ஒன்றியத்தில் பழையனுார், வல்லாரேந்தல், இளையான்குடி ஒன்றியத்தில் புதுக்கோட்டை, எஸ்.காரைக்குடி, கல்லல் ஒன்றியத்தில் கூத்தலுார், செவரக்கோட்டை, கண்ணங்குடி ஒன்றியத்தில் புத்துாரணி, தங்கன்குடி, தேவகோட்டை ஒன்றியத்தில் சிறுவத்தி, திருமணவயல், சாக்கோட்டை ஒன்றியத்தில் கண்டனுார், நாட்டுச்சேரி, திருப்புத்துார் ஒன்றியத்தில் செவ்வூர், வடமாவளி, சிங்கம்புணரி ஒன்றியத்தில் டி.காளாப்பூர், ஜெயங்கொண்ட நிலை, எஸ்.புதுார் ஒன்றியத்தில் மணலுார், மேலவண்ணாயிருப்பு போன்ற கிராமங்களில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.