/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சோழபுரம் ரமண விகாஸ் மாணவர்கள் சாதனை சோழபுரம் ரமண விகாஸ் மாணவர்கள் சாதனை
சோழபுரம் ரமண விகாஸ் மாணவர்கள் சாதனை
சோழபுரம் ரமண விகாஸ் மாணவர்கள் சாதனை
சோழபுரம் ரமண விகாஸ் மாணவர்கள் சாதனை
ADDED : மே 22, 2025 12:16 AM

சிவகங்கை: சோழபுரம் ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வெழுதிய 183 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர் ஹரிகிருஷ்ணன் 600க்கு 582, மாணவி பிரதிக்க்ஷா 577 மாணவர் சாய்ராமச்சந்திரன் 576 மதிப்பெண் பெற்றனர். கணினி அறிவியலில் 5 மாணவர்கள், கணினி பயன்பாடுகளில் ஒரு மாணவர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய 111 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவி முகீதா ஸ்ரீ சமூக அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றார். மாணவி கார்த்திகா, மாணவர் லெட்சுமணன், மாணவிகள் ரம்யஸ்ரீ, ஸ்ரீமதி அதிக மதிப்பெண் பெற்றனர். இவர்களில் மாணவி ஸ்ரீமதி சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றார். சமூக அறிவியலில் 5 மாணவர்கள் 100 மதிப்பெண், தமிழில் ஒரு மாணவர் 99 ஆங்கிலத்தில் ஒரு மாணவர் 99, கணிதத்தில் ஒரு மாணவர் 98, அறிவியலில் 3 மாணவர்கள் 96 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசியரை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் பாராட்டினார்.