Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தபால் அலுவலகத்தில் ஆதார் முகாம்

தபால் அலுவலகத்தில் ஆதார் முகாம்

தபால் அலுவலகத்தில் ஆதார் முகாம்

தபால் அலுவலகத்தில் ஆதார் முகாம்

ADDED : ஜன 21, 2024 03:30 AM


Google News
சிவகங்கை: பொங்கலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட மக்களின் ஆதார் சேவையை கருத்தில் கொண்டு மானாமதுரை தலைமை தபால் நிலையம், சிவகங்கை தலைமை தபால் நிலையம், திருப்பத்துார், இளையான்குடி, திருப்புவனம், கல்லல்,

காளையார்கோவில், சிவகங்கை கலெக்ட்ரேட், ராஜகம்பீரம், சாலைக்கிராமம், ஒக்கூர் ஆகிய அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்று வருகிறது. புதிதாக ஆதார் பதிவு செய்ய விரும்புவோர்களும் ஏற்கனவே தங்களிடம் உள்ள ஆதார் அட்டையில் அலைபேசி எண், முகவரி, புகைப்படம் முதலியவற்றில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் இந்த சிறப்பு முகாமில் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் அஞ்சலகங்களின் அருகாமையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் அவர்களின் விருப்பத்தின் பேரில் சிறப்பு முகாம்களும் நடத்திக் கொடுக்கப்படும் என சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us