Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தாயின் நினைவாக கோயில் கட்டி கும்பாபிஷேகம்; மூன்று மகன்களின் பாசம்

தாயின் நினைவாக கோயில் கட்டி கும்பாபிஷேகம்; மூன்று மகன்களின் பாசம்

தாயின் நினைவாக கோயில் கட்டி கும்பாபிஷேகம்; மூன்று மகன்களின் பாசம்

தாயின் நினைவாக கோயில் கட்டி கும்பாபிஷேகம்; மூன்று மகன்களின் பாசம்

ADDED : ஜூன் 18, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
திருப்புத்துார் : சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் கல்லல் அருகே வெளியாரியில் இறந்த தாயின் நினைவாக கோயில் கட்டி மூன்று மகன்கள் கும்பாபிஷேகம் நடத்தி மகிழ்ந்தனர்.

வெளியாரி தம்பதி கருப்பையா -- முத்துக்காளியம்மாள். இவரது மகன்கள் சண்முகநாதன், சரவணன், சந்தோஷ்குமார். முத்துக்காளியம்மாள் குடும்ப கஷ்டத்திலும் விவசாய வேலை செய்து, தாலி செயினை அடகு வைத்து மகன்களை படிக்க வைத்தார்.

சரவணன் பி.காம்., முடித்து புதுக்கோட்டையில் சுயதொழில் செய்கிறார். சரவணன் சிங்கப்பூரில் சுயதொழில் செய்கிறார். சந்தோஷ்குமார் அங்கு பன்னாட்டு நிறுவன மேலாளராக பணிபுரிகிறார்.

2021 உடல்நலக்குறைவால் 62 வயதில் முத்துக்காளியம்மாள் இறந்தார். தாய் இல்லாத குறையை போக்கிக் கொள்ள மகன்கள் கூடி ஆலோசித்தனர்.

தாய்க்கு ஐம்பொன்சிலை


அதன்படி தாய்க்கு சொந்த ஊரில் கோயில் கட்ட முடிவு செய்தனர். இரண்டாண்டுகளில் ரூ.பல லட்சத்தில் அழகான கோயில் கட்டினர். கோயில் விமானத்தில் தங்க கலசம் நிறுவினர். பழங்கால வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட கோயில் கருவறையில் கும்பகோணத்தில் வடிக்கப்பட்ட 460 கிலோ எடையில் 5 அடி உயரத்தில் தாயாரின் ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

கும்பாபிஷேகம்


இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக நான்கு கால யாகபூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க விமானத்திற்கு கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.

மகன்கள் கூறியதாவது:

அம்மாவின் நினைவாக அவர் வளர்த்த 20 மாடுகளை பராமரிக்கிறோம். அவற்றை பராமரிக்க ஆட்களை நியமித்துள்ளோம். சுப, விசேஷ காரியங்களை இங்கு வந்து நடத்துவோம் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us