/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/நான்கு வழிச்சாலை பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டி சாய்ப்புநான்கு வழிச்சாலை பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டி சாய்ப்பு
நான்கு வழிச்சாலை பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டி சாய்ப்பு
நான்கு வழிச்சாலை பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டி சாய்ப்பு
நான்கு வழிச்சாலை பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டி சாய்ப்பு
ADDED : ஜூன் 16, 2024 10:26 PM

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை தலா பத்து மீட்டர் அகலம் கொண்ட இருவழிச் சாலையும் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.
நான்கு வழிச்சாலை பணிக்காக சுமார் இரண்டாயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை வசம் சாலை இருந்த போது சாலையோரம் வேம்பு, புளி, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வரை வளர்க்கப்பட்டன.
நான்கு வழிச்சாலை பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
சாலைப் பணிகளுக்காக மரங்களை வெட்டி அகற்றும் போது ஒரு மரம் அகற்றப்பட்டால் பத்து மரங்கள் வரை வளர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் மரங்கள் நடவு செய்யப்படவில்லை ஒரு சில இடங்களில் சிவப்பு, மஞ்சள் நிற பூக்கொன்றை மரங்கள் மட்டுமே நடவு செய்து வளர்க்கப்பட்டு வருகின்றன. திருப்புவனம் பைபாஸ் ரோட்டை ஒட்டி உள்ள விளை நிலங்கள் அனைத்தும் பிளாட்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
நான்கு வழிச்சாலையில் இருந்து பிளாட்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால் பலரும் சாலையோர மரங்களை வேருடன் வெட்டி அகற்றி வருகின்றனர்.
மரங்கள் வெட்டப்பட்டது குறித்து பலமுறை புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்புவனம் நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோட்டில் தனியார் பெட்ரோல் நிரப்பும் மையத்தை ஒட்டி ஏராளமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வளர்க்கப்பட்டு வரும் ஒருசில மரங்களும் வெட்டப்பட்டு வருவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நான்கு வழிச்சாலை பயணம் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக மாறி வருகிறது. எனவே நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.