/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தெருவில் விளையாடிய சிறுவனை மாடு முட்டியது தெருவில் விளையாடிய சிறுவனை மாடு முட்டியது
தெருவில் விளையாடிய சிறுவனை மாடு முட்டியது
தெருவில் விளையாடிய சிறுவனை மாடு முட்டியது
தெருவில் விளையாடிய சிறுவனை மாடு முட்டியது
ADDED : செப் 10, 2025 03:10 AM

தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுப்பள்ளிவாசல் அருகே தெற்கு தெருவில் விளையாடிய சிறுவர்களை மாடு முட்டி துாக்கி வீசியது.
தொண்டி புதுப்பள்ளிவாசல் அருகே தெற்கு தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை தெருவில் இரு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பக்கமாக சென்ற பசுமாடு திடீரென்று பாய்ந்து ஒரு சிறுவனை முட்டி துாக்கி வீசியது. அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி வழியாக சென்றவர்கள் மாட்டை விரட்டினர்.
சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.