/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிறந்து 6 நாளான பெண் குழந்தை மீட்பு பிறந்து 6 நாளான பெண் குழந்தை மீட்பு
பிறந்து 6 நாளான பெண் குழந்தை மீட்பு
பிறந்து 6 நாளான பெண் குழந்தை மீட்பு
பிறந்து 6 நாளான பெண் குழந்தை மீட்பு
ADDED : மார் 25, 2025 05:16 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் பிறந்து ஆறே நாளான பெண் குழந்தையை கட்டை பையில் வைத்து வீசியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேவகோட்டை நகை கடைவீதி அம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு கட்டை பை ஒன்று கிடந்தது, அதில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதில், பிறந்து ஆறே நாளான பெண் குழந்தை இருப்பதை கண்டறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அக்குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மருத்துவ இணை இயக்குனர் உத்தரவுபடி அக்குழந்தையை காரைக்குடி அரசு மருத்துவமனை குழந்தை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.