/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் 50 பவுன் போலி நகை; நகை மதிப்பீட்டாளர் சஸ்பெண்ட் நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் 50 பவுன் போலி நகை; நகை மதிப்பீட்டாளர் சஸ்பெண்ட்
நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் 50 பவுன் போலி நகை; நகை மதிப்பீட்டாளர் சஸ்பெண்ட்
நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் 50 பவுன் போலி நகை; நகை மதிப்பீட்டாளர் சஸ்பெண்ட்
நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் 50 பவுன் போலி நகை; நகை மதிப்பீட்டாளர் சஸ்பெண்ட்
ADDED : மே 27, 2025 04:15 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் அருகே நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் அதிகாரிகள் சோதனை செய்த போது 13 பாக்கெட்களில் இருந்த 50 பவுன் போலி நகைகள் என்பதை கண்டறிந்தனர். நகை மதிப்பீட்டாளர் கண்ணனை சஸ்பெண்ட் செய்தனர்.
எஸ்.புதுார் அருகே நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் போலி நகைகளை அடமானமாக வைத்து ரூ. பல லட்சம் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத்திற்கு புகார் சென்றது. காரைக்குடி துணை பதிவாளர் செந்தில்குமார் விசாரணை நடத்த இணை பதிவாளர் உத்தரவிட்டார்.
சங்க லாக்கரில் உள்ள நகைகளை துணை பதிவாளர் சோதனை செய்தார். அதில் 13 பாக்கெட்களில் 50 (402 கிராம்) பவுன் நகைகள் போலி என்பதை கண்டறிந்தார். இந்த நகையை வைத்து தான் சங்கத்தில் ரூ.18.67 லட்சம் வரை கடன் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.
இம்மோசடியில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. போலி நகைகளை வைத்து யார் யார் எவ்வளவு பணத்தை பிரித்து கொண்டார்கள் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
மதிப்பீட்டாளர் சஸ்பெண்ட்
துணை பதிவாளர் செந்தில்குமார் கூறியதாவது:
போலி நகை மோசடி தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் கண்ணனை முதற்கட்டமாக சஸ்பெண்ட் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் இந்த மோசடியில் தொடர்புள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.