ADDED : ஜூன் 12, 2025 10:49 PM
திருக்கோஷ்டியூர்; காட்டாம்பூர் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி சிலர் கிராவல் மண் திருடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அனுமதியின்றி கிராவல் மண்ணை லாரியில் எடுத்த திருவாரூர் சுப்பிரமணியன் மகன்அருண்பாண்டியன் 28, ஜார்க்கண்ட் பிரத்தீவ் சிங் மகன் மணீஸ்குமார் சிங் 27, ஆகியோரைக் கைது செய்து, ஒரு மண் அள்ளும் இயந்திரம், ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தேசிய நெடுஞ்சாலைக்கு அனுமதி வாங்கி கிராவல் எடுப்பதாக போலியாக கூறி இவர்கள் அனுமதியின்றி கிராவல் மண் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.