/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/குறைதீர் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் நலத்திட்டம் குறைதீர் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் நலத்திட்டம்
குறைதீர் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் நலத்திட்டம்
குறைதீர் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் நலத்திட்டம்
குறைதீர் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் நலத்திட்டம்
ADDED : ஜன 30, 2024 01:49 AM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
பொது குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்டர் பி.ஏ.,(பொது) ஜெயமணி, உதவி இயக்குனர் (கனிமவளம்) சரவண பெருமாள் பங்கேற்றனர்.
இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்ட உதவி தொகை, மாற்றுத்திறனாளி உபகரணம் கோரி 323 பேர் மனுக்கள் அளித்தனர். அம்மனுவின் மீது உடனடி நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.
கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


