/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அண்ணன், தம்பி கொலை வழக்கில் 13 பேர் கைது அண்ணன், தம்பி கொலை வழக்கில் 13 பேர் கைது
அண்ணன், தம்பி கொலை வழக்கில் 13 பேர் கைது
அண்ணன், தம்பி கொலை வழக்கில் 13 பேர் கைது
அண்ணன், தம்பி கொலை வழக்கில் 13 பேர் கைது
ADDED : ஜூன் 05, 2025 03:12 AM
சிவகங்கை:ஆடு திருட வந்ததாக நினைத்து சிவகங்கை அருகே அண்ணன் தம்பியை அடித்துக் கொலை செய்த வழக்கில் மேலும் 9 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் 31. இவரது தம்பி சிவசங்கரன் என்ற விக்னேஸ்வரன் 24. செவ்வாய் கிழமை இரவு அழகமாநகரியில் உள்ள திருமலையை சேர்ந்த சுப்பு என்பவரது தோப்பில் ஆடு திருட வந்ததாக கூறி சிலர் அவர்களை தாக்கினர். இதில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அழகமாநகரியை சேர்ந்த திருப்பதி 45, பிரபு 30, விக்னேஸ்வரன் 31, தினேஷ் 31 ஆகியோரை மதகுபட்டி போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். நேற்று அழகமாநகரியை சேர்ந்த சீமராஜ் 35, தீபக் 30, வினோத் 34, பிரவீத் 20, அருண்பாண்டி 29, யுவராஜ் 22, அரவிந் 25, மணிகண்டன் 31, திருமலை சீமான் 43 ஆகிய 9 பேரை கைது செய்தனர்.