/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காளையை அடக்க 10 நிமிடமே ஆலோசனை கூட்டத்தில் நிபந்தனை காளையை அடக்க 10 நிமிடமே ஆலோசனை கூட்டத்தில் நிபந்தனை
காளையை அடக்க 10 நிமிடமே ஆலோசனை கூட்டத்தில் நிபந்தனை
காளையை அடக்க 10 நிமிடமே ஆலோசனை கூட்டத்தில் நிபந்தனை
காளையை அடக்க 10 நிமிடமே ஆலோசனை கூட்டத்தில் நிபந்தனை
ADDED : ஜன 11, 2024 04:02 AM
சிவகங்கை : மஞ்சுவிரட்டு, வடமஞ்சுவிரட்டு களத்தில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். வட மஞ்சுவிரட்டில் ஒரு காளையை பிடிக்க வீரர்களுக்கு 10 நிமிடமே ஒதுக்க வேண்டும், காளை கொம்பில் கட்டாயம் பிளாஸ்டிக் குப்பி பொருத்த வேண்டும் என சிவகங்கையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சுவிரட்டு விழாக்குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். சிவகங்கை எஸ்.பி., பி.கே., அர்விந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் முன்னிலை வகித்தனர்.கால்நடை இணை இயக்குனர் கார்த்திகேயன் வரவேற்றார்.
கோட்டாட்சியர்கள் சிவகங்கை சுகிதா, தேவகோட்டை பால்துரை, கூடுதல் எஸ்.பி., நமச்சிவாயம், மஞ்சுவிரட்டு விழாக்குழுவினர், வருவாய், கால்நடை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ரூ. 1 கோடிக்குகாப்பீடு அவசியம்
கூட்டத்தில் மஞ்சுவிரட்டிற்கு இணையதளம்மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ரூ. ஒரு கோடிக்கான காப்பீடு தொகை ஆவணம், வரைபடம், களத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமரா வரைபடங்கள் சமர்பிக்க வேண்டும். வாடிவாசலை மறைத்து வீரர்கள் நிற்க கூடாது.
காளை 15 மீட்டர் தாண்டி ஓடிய பின் அவற்றை பிடிக்க கூடாது. பிராணிகள் நல வாரிய உறுப்பினர், பிரதிநிதி முன்னிலையில் தான் காளைகளை அவிழ்த்து விட வேண்டும். கட்டாயம் காளையின் கொம்பில் பிளாஸ்டிக் குப்பி பொருத்த வேண்டும்.
காளையை அடக்க 10 நிமிடமே
வடமஞ்சுவிரட்டில்முன்பு வரை ஒரு காளையை அடக்க 20 நிமிடம் வழங்கப்பட்டது. இனி வடமஞ்சுவிரட்டில் பங்கேற்கும் காளையை அடக்க வீரர்களுக்கு 10 நிமிடம் மட்டுமே தரப்படும். அதற்கு பின் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பதுபோன்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.