ADDED : ஜூலை 26, 2024 02:01 AM

சிவகங்கை:சிவகங்கை அருகே பில்லுார் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் பாண்டி, 40. இவர் குடும்பத்துடன் சிவகங்கை சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் வசித்து கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த சிவகங்கை மரக்கடை வீதி தனியார் மதுபான கடை எதிரே இவரை ஓட ஓட விரட்டி சிலர் கொலை செய்தனர்.
பாண்டி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்குள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் விசாரித்து வருகிறார்.