ADDED : ஜூலை 16, 2024 11:57 PM
காரைக்குடி : காரைக்குடி இந்திரா நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரியப்பன் 24. இவர் 14 வயது சிறுமியிடம் அலைபேசியில் பேசி பழகி வந்துள்ளார். மாரியப்பன், நேரில் பார்க்க வேண்டும் எனக்கூறி சிறுமியை, அமராவதிப்புதுார் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமிக்கு, மாரியப்பன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீசார் மாரியப்பன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.