/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிள்ளைவயல் காளியம்மனுக்குபெண்கள் பூச்சொரிந்து வழிபாடு பிள்ளைவயல் காளியம்மனுக்குபெண்கள் பூச்சொரிந்து வழிபாடு
பிள்ளைவயல் காளியம்மனுக்குபெண்கள் பூச்சொரிந்து வழிபாடு
பிள்ளைவயல் காளியம்மனுக்குபெண்கள் பூச்சொரிந்து வழிபாடு
பிள்ளைவயல் காளியம்மனுக்குபெண்கள் பூச்சொரிந்து வழிபாடு
ADDED : ஜூலை 09, 2024 05:21 AM

சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பெண்கள் பூத்தட்டு எடுத்து அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர்.
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 70 ம் ஆண்டு பூச்சொரிதல் விழா, ஜூலை 5 ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்று வருகிறது.
எட்டாம் திருநாளான ஜூலை 12 அன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளிப்பார். அன்று காலை முதல் இரவு வரை நகரில் உள்ள அனைத்து சிறு கோயில்களில் இருந்தும் பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்துவர்.
விழாவின் 3ம் நாளான (ஜூலை 7) அன்று இரவு பிள்ளைவயல் காளியம்மன் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் அந்நகரை சேர்ந்த பெண்கள் ஏராளமானவர்கள் பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். தங்க கவசத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தினர்.