/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரோடு வசதி இல்லாததால் கிராமத்தை காலி செய்த மக்கள் மீண்டும் வருவார்களா; சீர் பாதங்கள் நடக்க முடியாததால் டிராக்டரில் சுவாமி உலா ரோடு வசதி இல்லாததால் கிராமத்தை காலி செய்த மக்கள் மீண்டும் வருவார்களா; சீர் பாதங்கள் நடக்க முடியாததால் டிராக்டரில் சுவாமி உலா
ரோடு வசதி இல்லாததால் கிராமத்தை காலி செய்த மக்கள் மீண்டும் வருவார்களா; சீர் பாதங்கள் நடக்க முடியாததால் டிராக்டரில் சுவாமி உலா
ரோடு வசதி இல்லாததால் கிராமத்தை காலி செய்த மக்கள் மீண்டும் வருவார்களா; சீர் பாதங்கள் நடக்க முடியாததால் டிராக்டரில் சுவாமி உலா
ரோடு வசதி இல்லாததால் கிராமத்தை காலி செய்த மக்கள் மீண்டும் வருவார்களா; சீர் பாதங்கள் நடக்க முடியாததால் டிராக்டரில் சுவாமி உலா
ADDED : ஜூலை 31, 2024 05:11 AM

மானாமதுரை வாகுடி அருகே உள்ளது குன்றாமணியேந்தல். இக்கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்த நிலையில் வறட்சி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.
ஒரு சில குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த ஊரில் வசித்து வருகின்றனர். வருடம் தோறும் ஆடியில் நடைபெறும் பிரம்மோற்ஸவ விழாவில் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் சுவாமி இக்கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த ஆண்டு குன்றாமணியேந்தல் கிராமத்திற்கு நவநீத பெருமாள் எழுந்தருளிய நிலையில் இக்கிராமத்தில் ரோடு வசதி இல்லாத காரணத்தினால் எப்போதும் பூப்பல்லக்கு மற்றும் குதிரை வாகனத்தில் செல்லும் சுவாமியை இம்முறை சீர் பாதங்கள் எனப்படும் சுவாமி பல்லக்கு மற்றும் வாகனங்களை துாங்குபவர்கள் புதுமையான முறையில் டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கை ஏற்றி அங்குள்ள கோயில்களுக்கு கொண்டு சென்றனர்.
குன்றாமணியேந்தல் நீலமேகம் கூறியதாவது:
இக்கிராமத்தில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வந்த நிலையில் வறட்சி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் ஏராளமான குடும்பங்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்றுவிட்டனர். இந்நிலையில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே உள்ள நிலையில் வருடம் தோறும் இக்கிராமத்திற்கு எழுந்தருளும் நவநீத பெருமாளை வெளியூர்களில் வசிக்கும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து வரவேற்று சுவாமியை வழிபட்டு வருகிறோம்.
இந்த வருடம் சுவாமியை துாக்கிக்கொண்டு சீர் பாதங்கள் நடக்க முடியாத நிலையில் டிராக்டரில் பூப்பல்லக்கை வைத்து சுவாமி வீதியுலா நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் நலன் கருதி ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் இங்கிருந்து காலி செய்த கிராம மக்கள் மீண்டும் இக்கிராமத்திற்கு வருவதற்கு தயாராக உள்ளதால் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.