/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வாரச்சந்தை நாளில் வஞ்சிக்கும் வேங்கைப்பட்டி ரோடு வாரச்சந்தை நாளில் வஞ்சிக்கும் வேங்கைப்பட்டி ரோடு
வாரச்சந்தை நாளில் வஞ்சிக்கும் வேங்கைப்பட்டி ரோடு
வாரச்சந்தை நாளில் வஞ்சிக்கும் வேங்கைப்பட்டி ரோடு
வாரச்சந்தை நாளில் வஞ்சிக்கும் வேங்கைப்பட்டி ரோடு
ADDED : ஆக 02, 2024 06:41 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாட்களில் வேங்கைப்பட்டி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பில் இருந்து வேங்கைப்பட்டி செல்லும் சாலை குறுகிய சாலையாக உள்ளது. இச்சாலையில் தான் பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை தோறும் சந்தை நடைபெறும் நிலையில் சில வியாபாரிகள் வாகன போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில் கடை போடுகின்றனர். தரை வாடகை வசூலுக்காக பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.
சந்தை நாட்களில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசலுக்கு இச்சாலை உள்ளாகிறது. பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் கூட பல நேரங்களில் நெரிசலில் சிக்கிக் கொள்கிறது. ஒரு போலீசார் மட்டுமே பணியில் இருக்கும் நிலையில் வேங்கைப்பட்டி ரோட்டில் ஏற்படும் நெரிசல்களை சரி செய்ய முடியவில்லை. இச்சாலையில் போட்டி போட்டுக் கொண்டு சில வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதும் போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு காரணமாக உள்ளது. சந்தைக்கு வருபவர்கள் உள்ளேயே டூவீலர்களை நிறுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் வியாபாரிகளுக்காக அந்த இடத்தை விட்டுவிட்டது.
இதனால் நடுரோட்டில் டூவீலர்களை நிறுத்த வேண்டிய அவலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேங்கைப்பட்டி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, ரோட்டில் கடைகள் போடுவதை தடுத்து, டூவீலர்களை நிறுத்துவதை முறைப்படுத்தி போக்குவரத்து சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.