/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நீர்வரத்து இல்லாததால் மேய்ச்சல் நிலமாகி போன வைகை ஆறு நீர்வரத்து இல்லாததால் மேய்ச்சல் நிலமாகி போன வைகை ஆறு
நீர்வரத்து இல்லாததால் மேய்ச்சல் நிலமாகி போன வைகை ஆறு
நீர்வரத்து இல்லாததால் மேய்ச்சல் நிலமாகி போன வைகை ஆறு
நீர்வரத்து இல்லாததால் மேய்ச்சல் நிலமாகி போன வைகை ஆறு
ADDED : ஜூன் 30, 2024 06:30 AM

திருப்புவனம் : வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் திருப்புவனம் பகுதி விவசாயிகள் வைகை ஆற்றை ஆடு, மாடு உள்ளிட்டவற்றிற்கு மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மதுரை நகருக்கு அருகில் திருப்புவனம் அமைந்திருப்பதால் நாளுக்கு நாள் புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. நகர்ப்பகுதியில் ஆடு, மாடு வளர்ப்பவர்களுக்கு மேய்ச்சல் நிலமே இல்லை.
இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பலரும் மேய்ச்சல் நிலமின்றி தவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றினுள் பல இடங்களில் புற்கள், செடிகள் முளைத்துள்ளன. மேலும் பள்ளங்களிலும் ஓரளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் பலரும் தினசரி வைகை ஆற்றினுள் அவைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.