/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பராமரிப்பில்லாத டோல்கேட் கழிப்பறை; வழியில் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள் பராமரிப்பில்லாத டோல்கேட் கழிப்பறை; வழியில் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள்
பராமரிப்பில்லாத டோல்கேட் கழிப்பறை; வழியில் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள்
பராமரிப்பில்லாத டோல்கேட் கழிப்பறை; வழியில் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள்
பராமரிப்பில்லாத டோல்கேட் கழிப்பறை; வழியில் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூலை 18, 2024 11:48 PM
தேவகோட்டை:
ராமேஸ்வரத்திற்கு செல்லும் பயணிகள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கழிப்பறை சேதமடைந்த நிலையில் இருப்பதால் அவசர தேவைக்கு சிரமப்படும் நிலை உள்ளது.
திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை அருகே கோடிக்கோட்டையில் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் வழியாக தினமும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்கின்றன. தினமும் ராமேஸ்வரத்திற்கும் வட மாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். திருச்சியில் இருந்தும் ராமேஸ்வரத்தில் இருந்தும் மையமாக இரண்டு மணி நேர பயணத்தில் இந்த கோடிக்கோட்டை டோல்கேட் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக டோல்கேட் அருகே மக்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி கட்டாயமாக செய்து கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. நீண்ட துாரம் பயணிப்பவர்கள் வழியிலுள்ள டோல்கேட்டிலுள்ள கழிப்பறையைத் தான் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் இங்கே நிலைமையோ தலைகீழாக உள்ளது.
இந்த டோல்கேட்டில் உள்ள கழிப்பறை பயன்படுத்த முடியாமல் படுமோசமாக உள்ளது. ஒரு கழிப்பறையில் கதவு உடைந்து பாதுகாப்பில்லாமல் பயனற்று கிடக்கிறது. எதிர்புறம் உள்ள கழிப்பறையில் கதவே இல்லை. மேலும் ஒருபுறம் உள்ள கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. கை கழுவும் இடம் அருகே நெருங்க முடியாமல் சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேடாக உள்ளது.
கழிப்பறை பின்புறம் உள்ள செப்டிக் டேங்க் மூடி உடைந்தும் ஒரு பகுதியில் மூடியே இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. அப்பகுதி கடை உரிமையாளர் ஆனந்த் கூறுகையில்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வழியாக ராமேஸ்வரம் செல்கின்றனர். யாத்ரீகர்கள் இயற்கை உபாதையை கழிக்க மிகவும் அவதிப்படுகின்றனர்.
கழிப்பறை பராமரிப்பு இல்லாதது குறித்து டோல்கேட் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். அடிப்படை வசதி நன்றாக இருந்தால் தான் டோல்கேட் கட்டணமே செலுத்த வேண்டும். ஆனால் சரியில்லை. நிர்வாகத்தினர் உடனடியாக போதிய குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.