திருநங்கைகள் சிறப்பு திட்ட முகாம்
திருநங்கைகள் சிறப்பு திட்ட முகாம்
திருநங்கைகள் சிறப்பு திட்ட முகாம்
ADDED : ஜூன் 22, 2024 05:19 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான திட்ட விளக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சமூக நலத்துறை அலுவலர் ரதிதேவி முன்னிலை வகித்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன், திறன் மேம்பாட்டு பயிற்சி மைய உதவி இயக்குனர் கர்ணன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள், தங்களுக்கென வீடு கட்ட அரசு இடம் ஒதுக்கீடு செய்து, பட்டா வழங்க வேண்டும். சிவகங்கை அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான ஆப்பரேஷன் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மகளிர் உரிமை தொகை போன்றே எங்களுக்கும் மாதந்தோறும் அரசு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.