Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விவசாயியை தாக்கியவருக்கு மூன்று ஆண்டு தண்டனை

விவசாயியை தாக்கியவருக்கு மூன்று ஆண்டு தண்டனை

விவசாயியை தாக்கியவருக்கு மூன்று ஆண்டு தண்டனை

விவசாயியை தாக்கியவருக்கு மூன்று ஆண்டு தண்டனை

ADDED : ஜூலை 13, 2024 05:17 AM


Google News
தேவகோட்டை : தேவகோட்டை ஆறாவயல் அருகே உள்ள ஏம்பவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மெய்யப்பன் மகன் பழனியப்பன்.

2017ம் ஆண்டு பழனியப்பன் வெளியூர் சென்றிருந்தார். அதே ஊரில் வசிக்கும் முருகையா மகன் கருப்பையா தங்கள் வீட்டிற்குள் ஆடுகள் நுழைந்தது தொடர்பாக வீட்டில் தனியாக இருந்த பழனியப்பன் மனைவியை தரக்குறைவாக பேசி திட்டியுள்ளார் . அப்போது வெளியூர் சென்றிருந்த கணவர் திரும்பி வந்தார். பழனியப்பன் இது பற்றி கருப்பையாவிடம் கேட்டுள்ளார். பழனியப்பனுக்கும் கருப்பையாவிற்கும் தகராறு ஏற்பட்டதில் பழனியப்பனை கம்பியால் தாக்கியதோடு கொலை செய்து விடுவதாக கருப்பையா மிரட்டி உள்ளார்.

பழனியப்பன் கொடுத்த புகாரில் ஆறாவயல் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். தேவகோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயியை தாக்கிய கருப்பையாவிற்கு கம்பியால் தாக்கியதற்கு இரண்டு ஜெயில் தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை ரூ. ஆயிரத்து 500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us