/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் ஆடிப்பூர விழா திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் ஆடிப்பூர விழா
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் ஆடிப்பூர விழா
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் ஆடிப்பூர விழா
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் ஆடிப்பூர விழா
ADDED : ஜூலை 16, 2024 03:56 AM
சிவகங்கை : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஜூலை 28 அன்று ஆடிப்பூர உற்ஸவ விழா தொடங்குகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் ஜூலை 28 அன்று மாலை 6:15 மணி முதல் இரவு 7:23 மணிக்குள் சேனை முதல்வர் புறப்பாடுடன் ஆடிப்பூர விழா துவங்குகிறது.
ஜூலை 29 அன்று காலை 6:53 மணிக்கு கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளல்,இரவு ஆண்டாள் பெருமாளுடன் வீதி உலா வருகிறார். தொடர்ந்து தினமும் காலை சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், அனுமன், கருடசேவை, சேஷ, குதிரை, அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
பத்தாம் நாள் ஆடிப்பூரவிழாவான ஆக.,7 அன்று காலை 9:08 முதல் 10:12 மணிக்குள் அலங் கரிக்கப்பட்ட தேரில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருள்வார்.
அன்று மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடையும். 11ம் நாளான ஆக.,8 அன்று காலை தீர்த்தவாரி உற்ஸவமும், இரவு தங்க தோளுக்கினியால் ஆஸ்தானத்தில் எழுந்தருளல் நிகழ்வு நடைபெறும்.
ஆடிப்பூர விழா ஏற்பாட்டை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் செய்து வருகின்றனர்.