/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இடைக்காட்டூரில் இன்று தேர் பவனி நாளை நற்கருணை பெருவிழா இடைக்காட்டூரில் இன்று தேர் பவனி நாளை நற்கருணை பெருவிழா
இடைக்காட்டூரில் இன்று தேர் பவனி நாளை நற்கருணை பெருவிழா
இடைக்காட்டூரில் இன்று தேர் பவனி நாளை நற்கருணை பெருவிழா
இடைக்காட்டூரில் இன்று தேர் பவனி நாளை நற்கருணை பெருவிழா
ADDED : ஜூலை 05, 2024 04:54 AM

மானாமதுரை: இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் ஆண்டு விழாவில் இன்று 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு மின் அலங்கார தேர்பவனி, நாளை 6ம் தேதி நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது.
இங்குள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் ஆண்டு தோறும் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 28ம் தேதி முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் சிவகங்கை, ராமநாதபுரம்,மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு இருதய பெருவிழா இன்று 5ம் தேதி காலை 7:00 மணிக்கு திருப்பலியும்,காலை11:00 மணிக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் பெருவிழா திருப்பலியும்,மாலை 6:00 மணிக்கு திருவிழா நிறைவு சிறப்பு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து மின் அலங்கார தேர்பவனியும் நடைபெற உள்ளது.
நாளை 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை திருத்தல அருள் பணியாளர் இம்மானுவேல் தாசன், மரியின் ஊழியர் சபை சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம்,செல்ஸ் இளைஞர் பேரவை, திரு இருதய பக்தர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.