/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விபத்தில் சிக்கிய வாகனம் வழக்கின்றி இழுத்தடிப்பு விபத்தில் சிக்கிய வாகனம் வழக்கின்றி இழுத்தடிப்பு
விபத்தில் சிக்கிய வாகனம் வழக்கின்றி இழுத்தடிப்பு
விபத்தில் சிக்கிய வாகனம் வழக்கின்றி இழுத்தடிப்பு
விபத்தில் சிக்கிய வாகனம் வழக்கின்றி இழுத்தடிப்பு
ADDED : ஜூலை 23, 2024 07:37 PM

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே, இரு வாரங்களுக்கு முன் மதுரையிலிருந்து 40க்கும் மேற்பட்ட விரலி மஞ்சள் மூட்டைகளுடன் ராமநாதபுரம் சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மஞ்சள் மூட்டைகளுடன் சரக்கு வாகனத்தை மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல், போலீஸ் ஸ்டேஷனில் இழுத்தடித்து வந்தனர்.
ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு வாகனத்தை, நேற்று, செய்தியாளர்கள் படம் பிடிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் செய்தியாளர்களிடம் ஏன் படம் எடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.