/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புரசடைஉடைப்பில் தப்பிய கைதி மதுரை மாமியார் வீட்டில் சிக்கினார் புரசடைஉடைப்பில் தப்பிய கைதி மதுரை மாமியார் வீட்டில் சிக்கினார்
புரசடைஉடைப்பில் தப்பிய கைதி மதுரை மாமியார் வீட்டில் சிக்கினார்
புரசடைஉடைப்பில் தப்பிய கைதி மதுரை மாமியார் வீட்டில் சிக்கினார்
புரசடைஉடைப்பில் தப்பிய கைதி மதுரை மாமியார் வீட்டில் சிக்கினார்
ADDED : ஜூன் 15, 2024 02:09 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் புரசடைஉடைப்பு திறந்தவெளி சிறையில் இருந்து தப்பிய கைதி கோபாலை, 24 மணி நேரத்திற்குள் பிடித்த போலீசார் மீண்டும் மதுரை சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கதிர்வேல் மகன் கோபால் 29. அருப்புக்கோட்டை மகளிர் போலீசார், இவரை 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர்.
நீதிமன்றம் இவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதில் 2 ஆண்டு சிறை தண்டனை காலத்தை முடித்து விட்டார். நன்னடத்தை கருதி இவரை சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புரசடைஉடைப்பு திறந்தவெளி சிறையில் அடைத்திருந்தனர். ஜூன் 13 அன்று காலை இவருக்கு ஆடு மேய்க்கும் பணி வழங்கப்பட்டது.
திறந்தவெளி பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த கோபால், அன்று காலை 9:30 மணிக்கு மேல் சிறையில் இருந்து தப்பி சென்றார்.
சிறை வார்டன் முத்து புகாரில், காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, எஸ்.பி., சதீஷ்குமார் ஆகியோர் விசாரணை செய்தனர். தனிப்படை அமைத்து தப்பிச்சென்ற கைதியை பிடிக்க உத்தரவிட்டனர்.
நேற்று காலை 7:00 மணிக்கு மதுரை மாவட்டம், கூடக்கோயில் அருகே திருமால் கிராமத்தில் மாமியார் வீட்டில் பதுங்கியிருந்த கோபாலை சிறைத்துறை அதிகாரிகள் கைது செய்து, மீண்டும் மதுரை சிறையில் அடைத்தனர்.
தப்பி சென்ற கைதியை 24 மணி நேரத்தில் பிடித்த சிறைத்துறையினரை டி.ஐ.ஜி., பாராட்டினார்.