/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி பயிற்சி மையம் நடத்தியவர் கைது வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி பயிற்சி மையம் நடத்தியவர் கைது
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி பயிற்சி மையம் நடத்தியவர் கைது
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி பயிற்சி மையம் நடத்தியவர் கைது
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி பயிற்சி மையம் நடத்தியவர் கைது
ADDED : ஜூலை 26, 2024 08:23 PM
காரைக்குடி:வேளாங்கண்ணியை சேர்ந்த தர்மதுரை மகன் கார்த்தி, 40. இவர் காரைக்குடி கழனிவாசலில் வெளிநாட்டுக்கு இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் பயிற்சி மையம் நடத்தி வந்தார். இந்த மையத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் லட்சுமணன், 23, சேர்ந்தார்.
இவர் கார்த்தி, அவரது மையத்தில் இருந்த திருமயம் கோனாபட்டுவை சேர்ந்த அடைக்கப்பன், 40, இருவரிடமும் வெளிநாடு செல்வதற்காக 4 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
பல மாதங்களாகியும் வெளிநாடு செல்வதற்கான அழைப்பு வரவில்லை. பயிற்சி மையத்திற்கு சென்று பார்த்தபோது அது பூட்டிக்கிடந்தது.
லட்சுமணன் புகாரின்படி காரைக்குடி போலீசார் கார்த்தியை கைது செய்தனர். அடைக்கப்பன் உள்ளிட்ட மேலும் மூவரை தேடி வருகின்றனர். மையத்தில் இருந்து 20 க்கும் மேற்பட்டவர்களின் பாஸ்போர்ட், சான்றிதழ்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.