/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இடிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுவர் பல ஆண்டுகளாகியும் அகற்றப்படவில்லை இடிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுவர் பல ஆண்டுகளாகியும் அகற்றப்படவில்லை
இடிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுவர் பல ஆண்டுகளாகியும் அகற்றப்படவில்லை
இடிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுவர் பல ஆண்டுகளாகியும் அகற்றப்படவில்லை
இடிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுவர் பல ஆண்டுகளாகியும் அகற்றப்படவில்லை
ADDED : ஜூலை 05, 2024 04:47 AM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அமராவதி புதுார் அரசு துணை சுகாதார நிலைய காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பல வருடங்களாகியும் அகற்றப்படாமல் உள்ளது.
அமராவதிப் புதுாரில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் அமராவதி புதுார் சுற்று வட்டார மக்கள் பயனடைந்து வந்தனர். தற்போது வாரத்தில் 2 நாள் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் ஊசி போடும் பணி நடந்து வருகிறது.
இந்த துணை சுகாதார நிலையம் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள துணை சுகாதார நிலைய காம்பவுண்ட் சுவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. சுவரை சரி செய்ய மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதுவரை சரி செய்யப்படவில்லை. இடிந்து கிடக்கும் காம்பவுண்ட் சுவற்றை அகற்றி, புதிய காம்பவுண்ட் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.