/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வீர அழகர் கோயிலில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு வீர அழகர் கோயிலில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு
வீர அழகர் கோயிலில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு
வீர அழகர் கோயிலில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு
வீர அழகர் கோயிலில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு
ADDED : ஜூலை 24, 2024 06:11 AM
மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இக்கோயிலில் இந்தாண்டுக்கான விழா ஜூலை 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாணம் 18ம் தேதியும், 21ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
22ம் தேதி தீர்த்தவாரி உற்ஸவ நிகழ்ச்சிக்காக வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு எழுந்தருளினார். மாலை சக்கரத்தாழ்வாருக்கு அலங்கார குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு வீர அழகர் பல்வேறு பகுதிகளில் வீதி உலா சென்று கோயிலுக்கு வந்தடைந்தார்.