ADDED : ஜூலை 13, 2024 05:21 AM
திருப்புத்துார், : திருப்புத்துாரில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர்செந்தில் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சுந்தரவடிவேல், மாநில செயலாளர் நாதசுந்தரம் சிறப்புரையாற்றினர்.கண்டதேவி தேரோட்டம் நடத்த ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும், நடைபெற்று வரும் திருப்பணிகளை அறநிலையத்துறை விரைவுபடுத்தவும் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.