/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குறைதீர் கூட்டத்தில் இயந்திரம் வழங்கல் குறைதீர் கூட்டத்தில் இயந்திரம் வழங்கல்
குறைதீர் கூட்டத்தில் இயந்திரம் வழங்கல்
குறைதீர் கூட்டத்தில் இயந்திரம் வழங்கல்
குறைதீர் கூட்டத்தில் இயந்திரம் வழங்கல்
ADDED : ஜூலை 09, 2024 05:06 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, உதவி தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை, ரேஷன் கார்டு கேட்டு 393 பேர் மனுவை கலெக்டரிடம் வழங்கினர். இதன் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி பங்கேற்றனர்.