/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாலம், ரோடு பணியால் மாணவர்கள் பாதிப்பு பாலம், ரோடு பணியால் மாணவர்கள் பாதிப்பு
பாலம், ரோடு பணியால் மாணவர்கள் பாதிப்பு
பாலம், ரோடு பணியால் மாணவர்கள் பாதிப்பு
பாலம், ரோடு பணியால் மாணவர்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 11, 2024 07:33 AM

தேவகோட்டை : ரோடு, பாலம் அமைக்கும் பணி நிறைவு பெறாததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
தேவகோட்டையில் மின்வாரியச் சாலையில் இருந்து ஞானந்தகிரி நகருக்கு இடையே பெருமாள் கண்மாய் ஊரணி கரையை ஒட்டி புதிதாக பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது.
மழை காலங்களில் கண்மாய்க்கு செல்லும் மழைநீர், கழிவுநீர் குளம் போல் தேங்கி மாணவர்கள், மக்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. மழைநீர் தேங்காமல் கண்மாய்க்கு செல்லும் வகையில் கால்வாயும் கட்டப்பட்டது.
கால்வாயின் மேல் ரோட்டின் குறுக்கே இரண்டு அடி உயரத்தில் கான்கிரீட் பாலம் கட்டப்பட்டுள்ளது.பாலம் பணி முடியாததால்மாணவர்கள் இந்த பாலத்தை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
பாலத்தையும் ரோட்டையும் இணைக்கும் பணியை நகராட்சியினர் விரைவில் மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.