/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை ரயில்வே கேட்டில் சிதறி கிடக்கும் கற்களால் அவதி மானாமதுரை ரயில்வே கேட்டில் சிதறி கிடக்கும் கற்களால் அவதி
மானாமதுரை ரயில்வே கேட்டில் சிதறி கிடக்கும் கற்களால் அவதி
மானாமதுரை ரயில்வே கேட்டில் சிதறி கிடக்கும் கற்களால் அவதி
மானாமதுரை ரயில்வே கேட்டில் சிதறி கிடக்கும் கற்களால் அவதி
ADDED : ஜூலை 15, 2024 04:29 AM

மானாமதுரை : மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட் பகுதியில் நீண்ட நாட்களாக கற்கள் சிதறி கிடப்பதினால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மதுரை செல்லும் ரயில்வே லைனில் பைபாஸ் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளங்களை பராமரிப்பு செய்வதற்காக ரோட்டை தோண்டி பராமரிப்பு செய்த பிறகு அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர்.
இதனால் நீண்ட நாட்களாக அப்பகுதியில் கற்கள் சிதறி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
டூவீலர் மற்றும் சைக்கிள்களில் வருபவர்கள் கற்கள் தடுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.