/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன்; அனுமதிக்கு காத்திருக்கும் அதிகாரிகள் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன்; அனுமதிக்கு காத்திருக்கும் அதிகாரிகள்
தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன்; அனுமதிக்கு காத்திருக்கும் அதிகாரிகள்
தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன்; அனுமதிக்கு காத்திருக்கும் அதிகாரிகள்
தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன்; அனுமதிக்கு காத்திருக்கும் அதிகாரிகள்
ADDED : ஜூலை 02, 2024 10:02 PM
திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்ய உதவி இயக்குனரிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலா வருகின்றன. இறைச்சி கடைகளில் மீதமாகும் கழிவை உண்டு வளரும் இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தெருக்களில் திரியும் நாய்கள் திடீரென சண்டையிட்டு நடந்து செல்பவர்களை விரட்டி கடித்து காயப்படுத்துகின்றன. ரோட்டில் குறுக்கே செல்லும் நாய்களால் இரு சக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். திருப்புவனத்தில் கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் நாய்களை கட்டுப்படுத்த அவற்றிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த பேரூராட்சி நிர்வாகம் திருப்புவனத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்ய போதிய இடவசதி எதுவும் இல்லை.
சிவகங்கை கால்நடை மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்ய அனுமதி வேண்டி பேரூராட்சிகளின் உதவி இயக்குனரிடம் விண்ணப்பித்து இருப்பதாக பதிலளித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம், அல்லிநகரம், பூவந்தி, கொந்தகையில் கால்நடை மருந்தகங்கள் உள்ள நிலையில் திருப்புவனத்தில் இருந்து 35 கி.மீ., துாரமுள்ள சிவகங்கைக்கு தெரு நாய்களை கொண்டுசென்று ஆப்பரேஷன் செய்வது என்பது கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும். மேலும் பேரூராட்சியிடம் நாய் பிடிக்கும் வாகனம், ஊழியர்கள் கிடையாது.
மானாமதுரையில் இருந்து தான் வரவழைக்க வேண்டும், அவர்கள் வந்து நாய்களை பிடித்து அதனை சிவகங்கை கொண்டு சென்று சிகிச்சை செய்வது என்பது நடக்காத செயல்.
அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு பத்து நாய்களுக்கு மட்டுமே அறுவை சிசிச்சை செய்ய முடியும். செலவீனமும் அதிகரிக்கும், மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்திலேயே நாய்களுக்கு ஆப்பரேஷன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்