ADDED : ஜூன் 08, 2024 05:33 AM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக நகராட்சி பூங்காவில் கோடை கொண்டாட்ட துவக்க விழா நடைபெற்றது.
இங்குள்ள பூங்கா நகராட்சி சார்பில் புனரமைக்கப்பட்டு, மின்விளக்கு அலங்காரம் அமைக்கப்பட்டது. நேற்று கோடை கால கொண்டாட்ட துவக்க விழா நடந்தது.
நகராட்சி தலைவர் துரைஆனந்த் வரவேற்றார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராம் முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், ராமநாதன், பாக்கியலட்சுமி, இந்திரா காந்தி, முன்னாள் கவுன்சிலர் சண்முகராஜன் பங்கேற்றனர்.
விழாவில் சிவம் மார்சியல் ஆர்ட்ஸ் மாணவர்களின் சிலம்பாட்ட வரவேற்பு நடனம் நடந்தது. மேடையில் நாட்டிய பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பெண்கள், குழந்தைகளுடன் பூங்கா நிகழ்ச்சியில் பங்கேற்று, ராட்டினம், நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.