/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிறுபான்மையினர் கல்வி, தொழில் கடன் பெற சிறப்பு மேளா; கலெக்டர் ஆஷா அஜித் தகவல் சிறுபான்மையினர் கல்வி, தொழில் கடன் பெற சிறப்பு மேளா; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
சிறுபான்மையினர் கல்வி, தொழில் கடன் பெற சிறப்பு மேளா; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
சிறுபான்மையினர் கல்வி, தொழில் கடன் பெற சிறப்பு மேளா; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
சிறுபான்மையினர் கல்வி, தொழில் கடன் பெற சிறப்பு மேளா; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
ADDED : ஜூன் 14, 2024 10:19 PM
சிவகங்கை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனி நபர், சுய உதவி குழு, சிறு தொழில், கைவினை கலைஞர், கல்வி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான சிறப்பு லோன்மேளா நடைபெற உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இதில் பயன்பெற சிறுபான்மையினர் குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறம் ரூ.1.20 லட்சம், கிராமப்புறம் ரூ.98,000க்குள் இருத்தல் வேண்டும். திட்டம் 2ன் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
தனி நபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ.20 லட்சம் கடனும், திட்டம் 2 ன் கீழ் 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும்.
கைவினை கலைஞர்ஆணுக்கு 5 சதவீத வட்டி, பெண்ணுக்கு 4 சதவீத வட்டியில் அதிகபட்சம்ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். சுயஉதவி குழு கடனாக நபருக்குஆண்டு வட்டி 7 சதவீதத்தில் ரூ.1 லட்சமும், திட்டம் 2 ன் கீழ் ஆணுக்கு 8 சதவீதம், பெண்ணுக்கு 6 சதவீத வட்டியில் நபருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படும்.
சிறுபான்மை மாணவ, மாணவிகள் இளங்கலை, தொழில் நுட்ப கல்வி படிக்க அதிகபட்சம் ரூ.20 லட்சம் 3 சதவீத வட்டியில் கிடைக்கும். திட்டம் 2 ன் கீழ் மாணவருக்கு 8 சதவீதம், மாணவிக்கு 5 சதவீத வட்டியில் ரூ.30 லட்சம் வரை கல்வி கடனுதவி வழங்கப்படும்.
இம்மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்ஸி, ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள்கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆதாரங்களுடன் சமர்பிக்கவும்.
இதற்காக கடன் வழங்கும் முகாம் ஜூன் 26ல் சிவகங்கை, 27ல் மானாமதுரை, 28ல் இளையான்குடி, ஜூலை 2ல் திருப்புவனம், 3ல் காளையார்கோவில், 4ல் திருப்புத்துார், 9ல் சிங்கம்புணரி, 10ல் காரைக்குடி, 11ல் தேவகோட்டையில் நடைபெறும். இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம், என்றார்.