ADDED : ஜூலை 28, 2024 06:34 AM
காரைக்குடி : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலம் சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.
ஆக.4 அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக.3 மற்றும் ஆக.4 தேதிகளில் தேவிப்பட்டினம், ராமேஸ்வரம்,சேதுக்கரை, திருப்புல்லாணி ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, முதுகுளத்துார் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.