/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குண்டும் குழியுமாக காட்சியளிக்கும்சிவகங்கை மகளிர் கல்லுாரி ரோடு குண்டும் குழியுமாக காட்சியளிக்கும்சிவகங்கை மகளிர் கல்லுாரி ரோடு
குண்டும் குழியுமாக காட்சியளிக்கும்சிவகங்கை மகளிர் கல்லுாரி ரோடு
குண்டும் குழியுமாக காட்சியளிக்கும்சிவகங்கை மகளிர் கல்லுாரி ரோடு
குண்டும் குழியுமாக காட்சியளிக்கும்சிவகங்கை மகளிர் கல்லுாரி ரோடு
ADDED : ஜூலை 09, 2024 05:19 AM

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து நீதிமன்றம், கல்லுாரி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகில் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், அரசு மகளிர் கல்லுாரி, கூட்டுறவு இணைபதிவாளர், முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலகங்கள் செயல்படுகின்றன. மகளிர் கல்லுாரிக்கு தினமும் பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலக வளாக திடல், எஸ்.பி., அலுவலகம் வழியே செல்லும் ரோட்டில் ஏராளான மாணவிகள் செல்கின்றனர்.
இது தவிர நீதிமன்றத்திற்கு அதிகளவில் மக்கள் இந்த ரோடு வழியே தான் சென்று வருகின்றனர். இந்த ரோட்டில் தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் செயல்படுகிறது. போக்குவரத்து உள்ள இந்த ரோடு பல மாதங்களாக புனரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மகளிர் கல்லுாரி, நீதிமன்றம், தனியார் பள்ளி உட்பட பிற துறை அலுவலகங்களுக்கு செல்வோர் ஆட்டோ, கார், மினி பஸ் உள்ளிட்டவற்றில் இந்த ரோட்டில் செல்வதற்குள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் எஸ்.பி., அலுவலகம் எதிரில் இருந்து மகளிர் கல்லுாரி வரை செல்லும் குண்டும் குழியுமான ரோட்டை புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.