/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மின் வினியோகமின்றி ஊழியர்கள் தவிப்பு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மின் வினியோகமின்றி ஊழியர்கள் தவிப்பு
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மின் வினியோகமின்றி ஊழியர்கள் தவிப்பு
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மின் வினியோகமின்றி ஊழியர்கள் தவிப்பு
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மின் வினியோகமின்றி ஊழியர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 11, 2024 11:01 PM
சிவகங்கை : சிவகங்கை துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் 40 நிமிடம் மின் வசதியின்றி ஊழியர்கள் தவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் குழந்தைகள் தத்தெடுப்பு உள்ளிட்ட ஆலோசனை கூட்டங்கள் நடந்தது. நேற்று காலை 11:55 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. அதற்கு பின் 40 நிமிடம் கழித்தே மின்வினியோகம் சீரானது. காரைக்குடி 230 கே.வி., மின் பீடரில் இருந்து சிவகங்கை துணை மின் நிலையத்திற்கு வரும் மின் வினியோகத்தில் பழுது ஏற்பட்டதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மின்வசதியின்றி தவித்தன.
நேற்று மதியம் குழந்தைகள் தத்து கொடுக்கவும், எடுக்கவும் வந்தவர்கள் கையில் குழந்தையை வைத்து கொண்டு சிரமம் அடைந்தனர். அனைத்து மாவட்ட அதிகாரிகள் அலுவலகங்களிலும் அதிக நேரம் 'யூபிஎஸ்'., செயல்படாததால் மின்வெட்டு பிரச்னையில் தவித்தனர்.
மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
காரைக்குடி 230 கே.வி., மின் நிலையத்தில் இருந்து சிவகங்கை துணை மின் நிலையத்திற்கு வரும் மின் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் மின்சப்ளை இன்றி போனது. சிறிது நேரத்திற்கு பின் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, மின் வினியோகம் சீராக வழங்கப்பட்டது.