/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இழுபறியில் சிவகங்கை வாரச்சந்தை ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம் இழுபறியில் சிவகங்கை வாரச்சந்தை ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம்
இழுபறியில் சிவகங்கை வாரச்சந்தை ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம்
இழுபறியில் சிவகங்கை வாரச்சந்தை ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம்
இழுபறியில் சிவகங்கை வாரச்சந்தை ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம்
ADDED : ஜூலை 21, 2024 04:45 AM
சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தை கட்டுமான பணியை ஒப்பந்த தேதிக்குள் முடிக்காததால் ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2022--23ம் ஆண்டு நகர் புற மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.3 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு 152 காய்கறி கடைகளும், 12 மீன் கடைகளும் கட்ட திட்டமிடப்பட்டு கட்டுமான பணி நடந்தது. தற்போது 90 சதவீத பணி முடிவடைந்த நிலையில், தரை தளத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணியும்,நடைபாதை அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது. ஒரு வருடத்திற்குள் பணியை முடிக்க வேண்டும்.
தற்போது வரை பணியை முடிக்காததால் புதன்தோறும் சந்தை ரோட்டில் நடக்கிறது. இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி கூறுகையில், நகராட்சி நிர்வாகம் இது வரை முடித்த பணிக்கு ரூ.70 லட்சத்திற்கு மேல் நிதி ஒதுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. பணி முடித்ததற்கான பணத்தை கொடுத்தால் விரைவில் கட்டுமானப் பணியை முடித்து நகாரட்சியிடம் சந்தை கட்டடத்தை ஒப்படைத்து விடுவோம். நகராட்சி தான் பணி முடித்ததற்கான பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்றார்.
கமிஷனர் கிருஷ்ணாராம்கூறுகையில், ஒப்பந்ததாரர் பணியை ஏப். மாதமே முடிக்க வேண்டும். ஆனால் இதுவரை முடிக்கவில்லை. ஆகையால் அவர் ஒப்பந்த பணியை முடிக்கும் வரை தினசரி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.