/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிங்கம்புணரி- - மதுரை பஸ் இயக்க கோரிக்கை சிங்கம்புணரி- - மதுரை பஸ் இயக்க கோரிக்கை
சிங்கம்புணரி- - மதுரை பஸ் இயக்க கோரிக்கை
சிங்கம்புணரி- - மதுரை பஸ் இயக்க கோரிக்கை
சிங்கம்புணரி- - மதுரை பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2024 10:57 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் இருந்து மதுரை செல்ல குறிப்பிட்ட நேரங்களில் பஸ்கள் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
வர்த்தக நகரமான சிங்கம்புணரியில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் பல்வேறு தேவைக்காக மதுரை சென்று வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில் மதுரை செல்ல பஸ்கள் இல்லை. குறிப்பாக காலை 9:00 மணிக்கு பிறகு 10:00 மணிக்கே அடுத்த பஸ் உள்ளது. அதே போல் காலை 11:10 மணிக்கு பிறகு மதியம் 12:20 மணிக்கே பஸ் உள்ளது. இதனால் கொள்முதல் உள்ளிட்ட வர்த்தக தேவைகளுக்கு செல்லும் மக்கள் இந்த இடைப்பட்ட நேரங்களில் கொட்டாம்பட்டி சென்று அங்கிருந்து வேறு பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது.இதனால் கால, பண விரயம் ஏற்படுகிறது.
எனவே சிங்கம்புணரியில் இருந்து மதுரைக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கூடுதல் பஸ்களை இயக்கவும் வேறு ஊர்களில் இருந்து அல்லாமல் நேரடியாக சிங்கம்புணரியில் இருந்தே புறப்படும் விதமாக இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.