ADDED : ஜூன் 14, 2024 04:59 AM
சிவகங்கை: போதை பொருளுக்கு எதிரான குறும்பட போட்டியில் முதல் இரண்டு இடம் பிடித்த கல்லுாரிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசுத்தொகை, சான்று வழங்கினார்.
மாவட்ட அளவில் அனைத்து கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கென போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார குறும்பட போட்டி நடத்தப்பட்டது. சிறந்த குறும்படங்களை தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ஆய்வுபடி சிறந்த குறும்பட போட்டியில் முதலிடத்தை திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரி பி.எஸ்சி., 3 ம் ஆண்டு மாணவர் எம்.அப்துல் ஆசிக் தலைமையிலான குழுவினர் பெற்றனர்.
இரண்டாம் பரிசை பள்ளத்துார் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லுாரி பி.எஸ்சி., தாவரவியல் துறை மாணவி எம்.ஹாஜிரா சுமையா பேகம் தலைமையிலான குழுவினர் பெற்றனர். வெற்றி பெற்ற இரு கல்லுாரி அணிகளுக்கும் பரிசு தொகை மற்றும் சான்றிதழை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.